சிவபெருமான் தனது ஏற்படட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட 'ஏகாதச ருத்ர' யாகம் ஒன்றை நடத்தினார். பூர்ணாஹுதி சமயத்தில் மகாவிஷ்ணு பிரம்மாதி தேவர்களுடன் ஸேவை சாதித்தார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க, விஷ்ணு பதினோரு ரூபத்துடன், ருத்திரனுடன் நித்யவாஸம் செய்யும் ஸ்தலம்தான் திருநாங்கூர் திவ்ய தேசங்கள். இவை மொத்தம் 11 கோயில்கள்.
மூலவர் 'வரதராஜ பெருமாள்', 'மணிக்கூட நாயகன்' என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் 'திருமாமகள் நாச்சியார்' என்று வணங்கப்படுகின்றார். பெரிய திருவடி, சந்திரன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|